இன்றைய போட்டிகள் - இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம்

3ஆவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகளின் இரண்டாம் நாளில் இன்று இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மற்றும் பங்களாதேஷ் மற்றும் நடப்பு சம்பியன்களான பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்திய, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி சென் லூசியாவில் குறொஸ் ஐலற் இல் (Gros Islet http://www.cricinfo.com/westindies/content/ground/59518.html ) உள்ளூர் நேரப்படி காலை 9.30 இற்கு ஆரம்பிக்கிறது.
சர்வதேச நேரப்படி - மதியம் 1.30.
இந்திய இலங்கை நேரப்படி முன்னிரவு 7 மணிக்கு.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தங்களது உலகக் கிண்ண கிறிக்கற் அறிமுகத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி சார்பாக விளையாடக்கூடும் என எதிர்பார்க்கும் அணி:
கெளதம் கம்பிர், முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங், மகேந்திரசிங் டோனி, றோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா/யூசுப் பதான், ஹர்பஜன் சிங், பிரவீன் குமார்/வினய் குமார், ஷகீர் கான் மற்றும் ஆஷிஷ் நெக்ரா

ஆப்கானிஸ்தானின் எதிர்பார்க்கை அணி:
கரீம் ஷாதீக், நூர் அலி, மொகமட் ஷஷாதத், நொவ்ரொஷ் மங்கல், ஹமிட் ஹஸன், மிர்வய்ஸ் அஷ்ரப், மொகமட் நபி, சமியுல்லா ஷென்வரி, அஸ்கர் ஸ்ரனிக்ஷய், சபூர் ஷத்ரன் மற்றும் றயீஸ் அக்மட்ஷாய்.

ஆடுகளம் அதிக ஓட்டங்களைக் குவிக்க உதவும் என்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


*********

இரண்டாவது போட்டியாக பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 இற்கு ஆரம்பிக்கிறது.
கிறீன்விச் நேரப்படி மாலை 5.30 இற்கு.
இந்திய இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு.

*********

நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கெதிராக நியூசிலாந்தும், அயர்லாந்து அணிக்கெதிராக மேற்கிந்தியத் தீவுகளும் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகளை நேரடியாக பார்க்க http://crictime.com என்ற தளத்தைப் பயன்படுத்தலாம்.

0 comments: