இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் ஆரம்பிக்கிறது...

3ஆவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகள் இன்று கயானாவின் புரொவிடென்ஸ் மைதானத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியோடு ஆரம்பிக்கிறது.
உள்ளூர் (கயானா) நேரப்படி இன்று மதியம் ஒரு மணிக்கு போட்டி ஆரம்பிக்கிறது.
(கிறீன்விச் நேரம் மாலை 5 மணி. இலங்கை- இந்திய நேரம் இரவு 10.30 )






முதலாவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் 2007ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற போது பாகிஸ்தான் அணியை 5 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியா வெற்றியாளர்களாகியது.
இரண்டாவது உலகக் கிண்ணம் 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றபோது இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றியாளர்களாகியது.

இன்றைய போட்டியில் சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்துள்ள பிரன்டன் மக்கலமும், 4ம் இடத்தில் உள்ள டில்ஷானும் சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
டில்ஷான் தவிர 5ம் இடத்தில் சனத் ஜெயசூரியவும்,7ம் இடத்தில் குமார் சங்கக்காரவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தவிர அதிக விக்கற்றுக்களைக் கைப்பற்றியோர் வரிசையில் நியூசிலாந்தின் டானியல் விற்றோரி 3ம் இடத்திலும் அஜந்த மென்டிஸ் மற்றும் லசித் மலிங்க ஆகியோர் முறையே 5ம் 6ம் இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழுமையான பட்டியல் -
அதிக ஓட்டங்கள் - இங்கே அழுத்துக

அதிக விக்கற்றுக்கள் - இங்கே அழுத்துக


இன்றைய போட்டியில் இலங்கை சார்பாக களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அணி:
டில்ஷான், மஹேல, சங்கக்கார, தினேஸ் சந்திமால், மத்தியூஸ், சனத், கப்புகெதர, குலசேகர, மென்டிஸ், மலஙிக, முரளி

நியூசிலாந்தின் எதிர்பார்க்கை அணி:
பிரன்டன் மக்கலம், ரைடர், கப்ரில், ரெய்லர், ஸ்ரைறிஸ், ஓரம்,கொப்கின்ஸ், விற்றோரி, நதன் மக்கலம், மில்ஸ்/சவுத்தி, பொன்ட்

ஆடுகளம் துடுப்பாடுவதற்கு சிரமமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


*******

2 ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கிறது.
(கிறீன்விச் நேரம் - இரவு 9 மணி.
இந்தி இலங்கை நேரப்படி - அதிகாலை 2.30 )

இப்போட்டியில் பங்குபற்றும் வீரர்களில் அயர்லாந்தின் ட்ரென்ற் ஜோன்ஸன் அதிக விக்கற்றுக்களை வீழ்த்தியோர் வரிசையில் 14 ஆவது இடத்தில் மற்றும் அன்ட்ரூ போத்தா 16ஆவது இடத்தில் இருக்க மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக 18ம் இடத்தில் ஜெரோம் ரெய்லர் இருக்கிறார்.
எனினும் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் வீரர்களில் டெரன் சமி உள்ளார். ஆனால் அவர் 27ம் இடத்திலேயே இருக்கிறார்.

துடுப்பாட்ட வீரர்களில் 14 ஆவது இடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார்.
அயர்லாந்து சார்பாக போர்ட்டபீல் 42 ஆவது இடத்திலும் ஓ பிரயன் 43 இடத்திலும் உள்ளனர்.

விளையாடும் என எதிர்பார்க்கும் அணி:

மேற்கிந்தியத் தீவுகள்:
கெய்ல், சந்தர்போல், பிராவோ, சர்வான், டியோநரேன், பொலாட், சமி, ராம்டின், சுலைமான் பென், ரவி ராம்போல், நிகித மில்லர்

அயர்லாந்து:
போர்ட்டபீல்ட், ஸ்ரேர்லிங், நியல் ஓ பிரயன், கியூசக்,  கெவின் ஓ பிரயன், கேரி வில்சன், மூனி, ஜோன்ஸன், போதா, கோனல், டொக்ரெல்


****

தமிழ் கிறிக்கற்றின் பதிவுகள் இனித் தொடர்ந்து வெளிவரும்.