இன்றைய போட்டிகள் - இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம்

3ஆவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகளின் இரண்டாம் நாளில் இன்று இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மற்றும் பங்களாதேஷ் மற்றும் நடப்பு சம்பியன்களான பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்திய, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி சென் லூசியாவில் குறொஸ் ஐலற் இல் (Gros Islet http://www.cricinfo.com/westindies/content/ground/59518.html ) உள்ளூர் நேரப்படி காலை 9.30 இற்கு ஆரம்பிக்கிறது.
சர்வதேச நேரப்படி - மதியம் 1.30.
இந்திய இலங்கை நேரப்படி முன்னிரவு 7 மணிக்கு.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தங்களது உலகக் கிண்ண கிறிக்கற் அறிமுகத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி சார்பாக விளையாடக்கூடும் என எதிர்பார்க்கும் அணி:
கெளதம் கம்பிர், முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங், மகேந்திரசிங் டோனி, றோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா/யூசுப் பதான், ஹர்பஜன் சிங், பிரவீன் குமார்/வினய் குமார், ஷகீர் கான் மற்றும் ஆஷிஷ் நெக்ரா

ஆப்கானிஸ்தானின் எதிர்பார்க்கை அணி:
கரீம் ஷாதீக், நூர் அலி, மொகமட் ஷஷாதத், நொவ்ரொஷ் மங்கல், ஹமிட் ஹஸன், மிர்வய்ஸ் அஷ்ரப், மொகமட் நபி, சமியுல்லா ஷென்வரி, அஸ்கர் ஸ்ரனிக்ஷய், சபூர் ஷத்ரன் மற்றும் றயீஸ் அக்மட்ஷாய்.

ஆடுகளம் அதிக ஓட்டங்களைக் குவிக்க உதவும் என்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


*********

இரண்டாவது போட்டியாக பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 இற்கு ஆரம்பிக்கிறது.
கிறீன்விச் நேரப்படி மாலை 5.30 இற்கு.
இந்திய இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு.

*********

நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கெதிராக நியூசிலாந்தும், அயர்லாந்து அணிக்கெதிராக மேற்கிந்தியத் தீவுகளும் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகளை நேரடியாக பார்க்க http://crictime.com என்ற தளத்தைப் பயன்படுத்தலாம்.

இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் ஆரம்பிக்கிறது...

3ஆவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகள் இன்று கயானாவின் புரொவிடென்ஸ் மைதானத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியோடு ஆரம்பிக்கிறது.
உள்ளூர் (கயானா) நேரப்படி இன்று மதியம் ஒரு மணிக்கு போட்டி ஆரம்பிக்கிறது.
(கிறீன்விச் நேரம் மாலை 5 மணி. இலங்கை- இந்திய நேரம் இரவு 10.30 )






முதலாவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் 2007ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற போது பாகிஸ்தான் அணியை 5 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியா வெற்றியாளர்களாகியது.
இரண்டாவது உலகக் கிண்ணம் 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றபோது இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றியாளர்களாகியது.

இன்றைய போட்டியில் சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்துள்ள பிரன்டன் மக்கலமும், 4ம் இடத்தில் உள்ள டில்ஷானும் சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
டில்ஷான் தவிர 5ம் இடத்தில் சனத் ஜெயசூரியவும்,7ம் இடத்தில் குமார் சங்கக்காரவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தவிர அதிக விக்கற்றுக்களைக் கைப்பற்றியோர் வரிசையில் நியூசிலாந்தின் டானியல் விற்றோரி 3ம் இடத்திலும் அஜந்த மென்டிஸ் மற்றும் லசித் மலிங்க ஆகியோர் முறையே 5ம் 6ம் இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழுமையான பட்டியல் -
அதிக ஓட்டங்கள் - இங்கே அழுத்துக

அதிக விக்கற்றுக்கள் - இங்கே அழுத்துக


இன்றைய போட்டியில் இலங்கை சார்பாக களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அணி:
டில்ஷான், மஹேல, சங்கக்கார, தினேஸ் சந்திமால், மத்தியூஸ், சனத், கப்புகெதர, குலசேகர, மென்டிஸ், மலஙிக, முரளி

நியூசிலாந்தின் எதிர்பார்க்கை அணி:
பிரன்டன் மக்கலம், ரைடர், கப்ரில், ரெய்லர், ஸ்ரைறிஸ், ஓரம்,கொப்கின்ஸ், விற்றோரி, நதன் மக்கலம், மில்ஸ்/சவுத்தி, பொன்ட்

ஆடுகளம் துடுப்பாடுவதற்கு சிரமமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


*******

2 ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கிறது.
(கிறீன்விச் நேரம் - இரவு 9 மணி.
இந்தி இலங்கை நேரப்படி - அதிகாலை 2.30 )

இப்போட்டியில் பங்குபற்றும் வீரர்களில் அயர்லாந்தின் ட்ரென்ற் ஜோன்ஸன் அதிக விக்கற்றுக்களை வீழ்த்தியோர் வரிசையில் 14 ஆவது இடத்தில் மற்றும் அன்ட்ரூ போத்தா 16ஆவது இடத்தில் இருக்க மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக 18ம் இடத்தில் ஜெரோம் ரெய்லர் இருக்கிறார்.
எனினும் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் வீரர்களில் டெரன் சமி உள்ளார். ஆனால் அவர் 27ம் இடத்திலேயே இருக்கிறார்.

துடுப்பாட்ட வீரர்களில் 14 ஆவது இடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார்.
அயர்லாந்து சார்பாக போர்ட்டபீல் 42 ஆவது இடத்திலும் ஓ பிரயன் 43 இடத்திலும் உள்ளனர்.

விளையாடும் என எதிர்பார்க்கும் அணி:

மேற்கிந்தியத் தீவுகள்:
கெய்ல், சந்தர்போல், பிராவோ, சர்வான், டியோநரேன், பொலாட், சமி, ராம்டின், சுலைமான் பென், ரவி ராம்போல், நிகித மில்லர்

அயர்லாந்து:
போர்ட்டபீல்ட், ஸ்ரேர்லிங், நியல் ஓ பிரயன், கியூசக்,  கெவின் ஓ பிரயன், கேரி வில்சன், மூனி, ஜோன்ஸன், போதா, கோனல், டொக்ரெல்


****

தமிழ் கிறிக்கற்றின் பதிவுகள் இனித் தொடர்ந்து வெளிவரும்.

மொகமட் யூசுப் ஓய்வு....

பாகிஸ்தானின் சாதனைத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித்தலைவரும் பாகிஸ்தான் கிறிக்கற் சபையால் காலவரையரையற்ற தடை விதிக்கப்பட்டவருமான மொகமட் யூசுப் சர்வதேச கிறிக்கற் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளார்.



35 வயதான யூசுப் ஒரு கலண்டர் வருடத்தில் அதிக ரெஸ்ற் ஓட்டங்களான 1788 ஓட்டங்களை 2006ம் ஆண்டு பெற்று உலக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் 2 வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் கிறிக்கற் சபையால் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

'ஆம். பாகிஸ்தான் கிறிக்கற் வீரர் என்ற நிலையிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளேன். எனது முடிவு உணர்வு மேலீட்டால் எடுக்கப்பட்ட ஒன்றல்ல' என்று AFP செய்தி நிறுவனத்திற்கு யூசுப் தெரிவித்துள்ளார்.

'இத்துணை ஏற்றுக் கொள்ள முடியாத அவமானத்திற்குப் பின்னர் தொடர்ந்து பாகிஸ்தானுக்காக கிறிக்கற் விளையாடுவதில் அர்த்தமேதும் இல்லை. எனது முடிவை வரும் திங்கட்கிழமை அறிவிப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தடையை எதிர்த்து முறையிடப் போவதாக யூசுப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
'ஆம். நான் இப்போதும் மேன்முறையீடு செய்யலாம். ஆனால் இறுதி முடிவு திங்கட்கிழமை எடுக்கப்படும்.' என்றார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் யூசுப்பின் பெயர் இடம்பெறாமையால் மேலும் வருத்தமடைந்திருந்த யூசுப் 'நான் நிறையவே காயப்பட்டு உணர்கிறேன். நான் எப்போதும் பாகிஸ்தானுக்காகவே விளையாடினேன், எனது இரசிகர்கள் இதை அறிவார்கள். ஆனால் பாகிஸ்தானில் கிறிக்கற்றை நடத்துபவர்களுக்கு இது தெரியாது, இது சோகமானது' என்றார்.

'எனது 12 வருட கிறிக்கற் வாழ்க்கை களங்கமற்றது. நான் யாரையும் ஏமாற்றியிருக்கவில்லை' என்றார்.

றோமன் கத்தோலிக்கராக பிறந்த யூசுப் 2005ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டதோடு அதன்பின் கிறிக்கற் தவிர மத போதனைகளிலும் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதவரை யூசுப் 88 ரெஸ்ற் போட்டிகளில் 24 சதங்கள் உட்பட 7431 ஓட்டங்களையும் 282 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 9624 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இவர் 2007ம் ஆண்டுக்கான சிறந்த கிறிக்கற் வீரராக சர்வதேச கிறிக்கற் சபையால் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மும்பாய் முன்னிலையில் - IPL

இதுவரை முடிவடைந்த IPL போட்டிகளின் படி மும்பாய் அணி முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை மும்பாய் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.mumbai-indians_ipl313
மும்பாய், ரோயல் சலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மாத்திரம் தலா நான்கு போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. ஆனால் றோயஸ் சலஞ்சர்ஸ், டெல்லி, சென்னை ஆகிய அணிகள் மட்டுமே இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பாய், ராஜஸ்தான், நைட் ரைடர்ஸ், பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 5 போட்டிகளிலும், டெக்கன் 4 போட்டிகளிலும் விளையாடியுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைமையுடன்கூடிய பஞ்சாப் மற்றும் நைட்ரைடர்ஸ் அணிகளில் பஞ்சாப் ஆரம்பம் முதலே சரிவைச்சந்தித்து வருவதும், டெல்லி சிறப்பாக ஆரம்பித்த போதிலும் தற்போது புள்ளிப்பட்டியலில் 7வதாக இடம்பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று முடிவடைந்த IPLலின் 21வது போட்டி வரையிலான அணிகளின் நிலவரம் வருமாறு
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி NRR
மும்பாய் 5 4 1 8 +1.167
ரோயல்சலஞ்சர்ஸ் 6 4 2 8 +0.961
டெக்கன் 4 3 1 6 +0.450
டெல்லி 6 3 3 6 -.618
சென்னை 6 2 4 4 -.079
ராஜஸ்தான் 5 2 3 4 -.425
நைட்ரைடர்ஸ் 5 2 3 4 -.851
பஞ்சாப் 5 1 4 2 -.533
இன்று கடந்த இரு IPL தொடா்களிலும் சம்பியனான ராஜஸ்தான், டெக்கன் ஆகிய அணிகள் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இந்திய அணி அறிவிப்பு...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவித்த இந்திய அணியில் புதிய வீரராக கர்நாடகாவைச் சேர்ந்த வினய் குமார் மட்டுமே இடம்பெறுகிறார். இதேவேளை சுழற்பந்துவீச்சாளரான பியூஸ் சவ்லா உம் கிட்டத்தட்ட 2 வருடங்களின் பின்னர் அணிக்கு திரும்புகிறார்.
எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் வேகப்பந்துவீச்சாளர் இசாந் சர்மா மற்றும் துடுப்பாட்ட வீரர் விராத் கோலி, மனிஷ் பான்டி ஆகியோர் முக்கியமாக அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை....



காயங்கள் காரணமாக அவஸ்தைப்படும் கம்பீர் மற்றும் ஆஷிஷ் நெக்ரா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் இடத்தை ப்ரஹ்ஜான் ஒசா மற்றும் அமித் மிஸ்ராவைப் பின்தள்ளி பியூஸ் சவ்லா கைப்பற்றுகிறார்.

அணி:
மகேந்திரசிங் டோணி, விரேந்தர் செவாக், கெளதம் கம்பீர், யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், டினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஷகீர் கான், பிரவீன் குமார், ஆஷிஷ் நெக்ரா, ஹர்பஜன் சிங், பியூஸ் சவ்லா, வினய் குமார், றோகித் சர்மா