IPL இதுவரையிலான நிலவரம்

60 போட்டிகள் கொண்ட IPL தொடரில் இதுவரை 8 போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. அதன்படிடெல்லியும் நைட்ரைடர்ஸ் அணியும் தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகிக்கின்றன. டெல்லி, நைட்றைடர்ஸ், சென்னை,ராஜஸ்தான் பங்களூர் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா இரண்டு போட்டிகளிலும், நைட்றைடர்ஸ் மூன்று போட்டிகளிலும்  விளையாடியிருப்பதும் மும்பாய் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.








அணிபுள்ளிவெற்றிதோல்விNRபுள்ளிNRR
டெல்லி220040.71
நைட்றைடர்ஸ்32104-0.64
சென்னை211020.60
டெக்கன்211020.50
மும்பை110020.20
பங்களூர்211020.11
பஞ்சாப்20200-0.43
ராஜஸ்தான்20200-0.80
அணிகள் தலா இரண்டு முறை ஒவ்வொரு அணிகளுடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின்படி அதிகூடிய ஓட்டங்களைப்பெற்ற வீரர்களின் விபரம் வருமாறு

வீரரின் பெயர்
போ
ஓட்ட
அதி.ஓ
சரா.
S/R
100’s
50’s
4
6’
ஜக் கலிஸ் (பங்களூர்)
2

154
89*
0.00
143.92
0
2
15
6

போபரா(பஞ்சாப்)

2

133
77
66.50
135.71
0
2
16
3
டோனி(சென்னை)
2

108
66*
108.00
174.19
0
1
9
5

Y.பதான்(ராஜஸ்)

2



100

100

50.00

238.09

1

0

9

8

கில்கிறிஸ்ட்(டெக்கன்)

2



92

54

46.00

176.92

0

1

7

6

சேவாக்(டெல்லி)

2


83

75

41.50

207.50

0

1

10

5





இதுவரை நடைபெற்ற போட்டிகளின்படி அதிகூடிய விக்கற்களைப் பெற்ற வீரர்களின் விபரம் வருமாறு




வீரரின் பெயர்
போ
விக்க
சி.ப
சரா.
Econ
4விக்
5விக்
வாஸ் (டெக்கன்)
2
5
3/21
8.60
6.14
0
0


மத்தியூஸ்(நைட்றைடர்ஸ்)


3


5


4/19


15.00


6.81


1


0


மஸ்கரைனஸ்(ராஜஸ்தான்)


2


4


2/31


16.25


8.12


0


0


கெம்ப் (சென்னை)


2


3


3/12


9.00


5.22


0


0


நானெஸ்(டெல்லி)


2


3


2/12


13.00


4.87


0


0


முரளிகார்த்திக் (நைட்ரைடர்ஸ்)


3


3


2/22


20.00


5.45


0


0



IPL கோலாகலமாக ஆரம்பமாகியது -வீடியோ இணைப்பு

இன்று இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகள் மும்பாய் பட்டேல் ஸ்போட்ஸ் எக்கடமி ஸ்டேடியத்தில் இனிதே ஆரம்பமாகியது. அணிகளின் தலைவர்களை அறிமுகம் செய்வதுடன் ஆரம்பமான ஆரம்ப நிகழ்வு, அதன் பின்னர் IPL தலைவர் லலித் மோடியின் நீண்ட பேச்சுடனும், கோலாகலமான களியாட்ட நிகழ்வுகளுடனும் இனிதே ஆரம்பமாகியது.

லலித் மோடி தனது பேச்சில் தான் இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படுவதாகவும், NFL உதைபந்தாட்ட லீக் போட்டிகள், கூடைப்பந்துப்போட்டிகளை விட IPL போட்கள் பிரபல்லமடைந்திருப்பதாகவும் அதனால் தான் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார்.

இந்தமுறை 8அணிகளுடனும், 97 வீரர்களுடனும், 60 போட்டிகளைக் கொண்டதாக IPL அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய முதல் போட்டி டெக்கன் சார்ஜஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு போட்டி முடிவுகளையும் உடனுக்குடன் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழில் கிறிக்கற் தளத்துடன் இணைந்திருங்கள்.

யூசுப் சர்வதேச கிறிக்கற்றிலிருந்து ஓய்வா?

அணித்தலைவர் மொகமட் யூசுப் இற்கு எதிரான தடை வாழ்நாள் தடையல்ல என்றும் நிலைவரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம் என்று பாகிஸ்தான் கிறிக்கற் சபை தெளிவுபடுத்தியுள்ள போதிலும் மன ரீதியில் தாக்கப்பட்டுள்ள அணித்தலைவர் யூசுப் ஓய்வை நோக்கிய முடிவுகளை எடுக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது

பாகிஸ்தான் கிறிக்கற் சபையால் தன்மீது தடைவிதிக்கப்பட்டதாக செய்தி வந்தபோது யூசுப் மிகவும் கலக்கமடைந்ததாக யூசுப்பிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே யூசுப் உடனடியாக சிந்தித்து சர்வதேச கிறிக்கறிறிலிருந்து ஓய்வெடுக்கவிருப்பதாகவும் ஆனால் தாங்கள் அவரை அந்த ஓய்வு எடுக்கும் விடயம் பற்றி மீள்பரிசீலனை செய்யச்சொல்லப்போவதாகவும் அவர் தற்போதைய சூள்நிலையில் மிகுந்த குழப்பமடைந்திருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கருத்துத் தெரிவித்த யூசுப்பின் நண்பர் யூசுப் பாகிஸ்தான் கிறிக்கற் சபை தன்மீது விதித்த தடையை கேள்வியுற்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்ததாகவும் அவருக்கு ஊடகங்களில் செய்தி வெளியாகிய போதே செய்தி தெரியும் என்றும் தெரிவித்தார்.

அவருக்கு தான் செய்த பிழை என்ன என்பது தெரிய வேண்டும், அவருக்கு இதுவரை பாக். கிறிக்கற் சபையிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை, ஒரு தொலைபேசி அழைப்புக்கூட வரவில்லை. பாகிஸ்தானின் ஒரு மூத்தவீரரை பாக்.கிறிக்கற் சபை நடாத்தும் விதம் சரியல்ல என்று அவர் தெரிவித்தார்.

யூசுப் இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7431 ஓட்டங்களை 53 எனும் சராசரியுடன் பெற்றுள்ளார் இது பாகிஸ்தான் வீரர்களால் பெறப்பட்ட அதிகூடிய மூன்றாவது டெஸ்ட் ஓட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

யூசுப், யூனிஸ்கான் மீது வாழ்நாள் தடை- பாகிஸ்தான் கிறிக்கற் சபை அதிரடி...

விசாரணைக்குழுவின் அறிக்கையைப் பெற்ற பாகிஸ்தான் கிறிக்கற் சபை மிகவும் உறுதியான தண்டனைகளை பாகிஸ்தான் அணியின் தேசிய கிறிக்கற் வீரர்கள் மீது விதித்திருக்கிறது.



அதில் உச்சக்கட்டமாக எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் கிறிக்கற் அணியின் மூத்த வீரர்களான மொகமட் யூசுப் மற்றும் யுனிஸ்கான் ஆகியோர் பாகிஸ்தான் தேசிய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி இவர்கள் இனி எதிர்காலத்தில் பாகிஸ்தான் சார்பாக சர்வதேச கிறிக்கற் போட்டிகளில் விளையாட முடியாது. எனினும் உள்ளூர் போட்டிகளிலும் கவுன்ரி போட்டிகளிலும் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதைத் தவிர எதிர்பார்க்கப்பட்டது போல சொய்ப் மலிக் மற்றும் ரானா நவீட் உல் ஹசன் ஆகியோருக்கு ஒருவருடத்தடையும், அக்மல் சகோதரர்கள் மற்றும் அப்ரிடி மீது 2 தொடக்கம் 3 மில்லியம் தண்டப்பணமும் இவர்கள் மூவரும் 6 மாதகால கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் கிறிக்கற் சபை அதிரடி நடத்தியிருக்கிறது.

இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வருகையில் அவற்றை தொடர்ந்து இற்றைப்படுத்தக் காத்திருக்கிறோம்....

http://www.cricinfo.com/pakistan/content/story/451392.html

பின்குறிப்பு: இறுதி அறிக்கையின்படி யுனிஸ்கான் மற்றும் யூசுப்கான் ஆகியோருக்கு விதிக்கப்பட்டது வாழ்நாள் தடை என்று சொல்ல முடியாது என்றும் ஆனால் மட்டுப்படுத்தப்படாத காலப்பகுதிக்கு, குறிப்பிடமுடியாத காலப்பகுதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது...