யூசுப் சர்வதேச கிறிக்கற்றிலிருந்து ஓய்வா?

அணித்தலைவர் மொகமட் யூசுப் இற்கு எதிரான தடை வாழ்நாள் தடையல்ல என்றும் நிலைவரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம் என்று பாகிஸ்தான் கிறிக்கற் சபை தெளிவுபடுத்தியுள்ள போதிலும் மன ரீதியில் தாக்கப்பட்டுள்ள அணித்தலைவர் யூசுப் ஓய்வை நோக்கிய முடிவுகளை எடுக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது

பாகிஸ்தான் கிறிக்கற் சபையால் தன்மீது தடைவிதிக்கப்பட்டதாக செய்தி வந்தபோது யூசுப் மிகவும் கலக்கமடைந்ததாக யூசுப்பிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே யூசுப் உடனடியாக சிந்தித்து சர்வதேச கிறிக்கறிறிலிருந்து ஓய்வெடுக்கவிருப்பதாகவும் ஆனால் தாங்கள் அவரை அந்த ஓய்வு எடுக்கும் விடயம் பற்றி மீள்பரிசீலனை செய்யச்சொல்லப்போவதாகவும் அவர் தற்போதைய சூள்நிலையில் மிகுந்த குழப்பமடைந்திருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கருத்துத் தெரிவித்த யூசுப்பின் நண்பர் யூசுப் பாகிஸ்தான் கிறிக்கற் சபை தன்மீது விதித்த தடையை கேள்வியுற்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்ததாகவும் அவருக்கு ஊடகங்களில் செய்தி வெளியாகிய போதே செய்தி தெரியும் என்றும் தெரிவித்தார்.

அவருக்கு தான் செய்த பிழை என்ன என்பது தெரிய வேண்டும், அவருக்கு இதுவரை பாக். கிறிக்கற் சபையிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை, ஒரு தொலைபேசி அழைப்புக்கூட வரவில்லை. பாகிஸ்தானின் ஒரு மூத்தவீரரை பாக்.கிறிக்கற் சபை நடாத்தும் விதம் சரியல்ல என்று அவர் தெரிவித்தார்.

யூசுப் இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7431 ஓட்டங்களை 53 எனும் சராசரியுடன் பெற்றுள்ளார் இது பாகிஸ்தான் வீரர்களால் பெறப்பட்ட அதிகூடிய மூன்றாவது டெஸ்ட் ஓட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: