யூசுப், யூனிஸ்கான் மீது வாழ்நாள் தடை- பாகிஸ்தான் கிறிக்கற் சபை அதிரடி...

விசாரணைக்குழுவின் அறிக்கையைப் பெற்ற பாகிஸ்தான் கிறிக்கற் சபை மிகவும் உறுதியான தண்டனைகளை பாகிஸ்தான் அணியின் தேசிய கிறிக்கற் வீரர்கள் மீது விதித்திருக்கிறது.



அதில் உச்சக்கட்டமாக எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் கிறிக்கற் அணியின் மூத்த வீரர்களான மொகமட் யூசுப் மற்றும் யுனிஸ்கான் ஆகியோர் பாகிஸ்தான் தேசிய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி இவர்கள் இனி எதிர்காலத்தில் பாகிஸ்தான் சார்பாக சர்வதேச கிறிக்கற் போட்டிகளில் விளையாட முடியாது. எனினும் உள்ளூர் போட்டிகளிலும் கவுன்ரி போட்டிகளிலும் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதைத் தவிர எதிர்பார்க்கப்பட்டது போல சொய்ப் மலிக் மற்றும் ரானா நவீட் உல் ஹசன் ஆகியோருக்கு ஒருவருடத்தடையும், அக்மல் சகோதரர்கள் மற்றும் அப்ரிடி மீது 2 தொடக்கம் 3 மில்லியம் தண்டப்பணமும் இவர்கள் மூவரும் 6 மாதகால கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் கிறிக்கற் சபை அதிரடி நடத்தியிருக்கிறது.

இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வருகையில் அவற்றை தொடர்ந்து இற்றைப்படுத்தக் காத்திருக்கிறோம்....

http://www.cricinfo.com/pakistan/content/story/451392.html

பின்குறிப்பு: இறுதி அறிக்கையின்படி யுனிஸ்கான் மற்றும் யூசுப்கான் ஆகியோருக்கு விதிக்கப்பட்டது வாழ்நாள் தடை என்று சொல்ல முடியாது என்றும் ஆனால் மட்டுப்படுத்தப்படாத காலப்பகுதிக்கு, குறிப்பிடமுடியாத காலப்பகுதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது...

1 comments:

Atchuthan Srirangan said...

இவர்கள் எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டார்கள்