பாகிஸ்தானின் வீரர்களுக்கு ஒரு வருட போட்டித்தடை

அவுஸ்திரேலியாவுடனான வெள்ளையடிப்புத் தோல்விக்குப்பிறகு பாகிஸ்தான் கிறிக்கற்றில் பல குளறுபடிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பல பாகிஸ்தான் கிறிக்கற் வீரர்களுக்கு அபராதம் தடை என்பன விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சகலதுறை விரர் சொகைப் மலிக், மற்றும் ரானா நாவிட் ஆகியோர் ஒரு வருட போட்டித்தடை மற்றும் 2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர அப்ரிடி, கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகியோருக்கும் அவர்களின் நடத்தையை சீர்செய்துகொள்ள இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அப்ரிடி கம்ரான் அக்மல் ஆகியோருக்கு 3 மில்லியன் அபராதமும்? உமர் அக்மலுக்கு 2மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ருவன்ரி ருவன்ரி உலகக்கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியும் தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன் சொகைப் மலிக், ரானா நாவீட் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை, தவிர மொகமட் ஹபீஸ், சல்மான் பட், கலிட் லத்தீப், உமர் அக்மல், பாவாட் அலாம், மிஸ்பா உல் ஹக், அப்துல் ரசாக்ஈ அப்ரிடி, யசீர் அரபாத், ஹமட் அசாம், உமர் குல், மொகமட் அமீர், மொகமட் அசிவ், சகீட் அஜ்மல், கம்ரான் அக்மல் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

சாசெப், மொகமட் சமி, ரானா ஹசன், நாவ்ட்யசின், சப்ராஸ் அஹமட் ஆகியோர் மேலதிக ஐந்து வீரர்களாக அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம்-http://www.onlinenews.com.pk/details.php?id=159721

2 comments:

ARV Loshan said...

தேவை தான். இவர்கள் ஐவரும் தலைமைப் பதவிக்கு கணக்கில் சேர்க்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதே.
மிஸ்பா அலது ரசாக் பொருத்தமாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.

ரான நவீடும், உமர் அக்மலும் இந்தக் கும்பலில் சேர்ந்தது தான் அதிர்ச்சி..

கன்கொன் || Kangon said...

@லோஷன் அண்ணா...

உமர் அக்மல் பற்றி 3ஆவது ரெஸ்ற் போட்டிக்கு முன்னரே அவர் இப்படி அச்சுறுத்துகிறார் என்று செய்தி வந்தது தானே...

உமர் அக்மலைப் பற்றி அனைவரும் புகழ்ந்தபோது பாவி பாகிஸ்தானில் பிறந்துவிட்டானே அங்குள்ள அரசியலாலே அழிந்துவிடுவானே என்று யோசித்தால் பெடியன் தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்கிறான்....