IPLலில் வெளிநாட்டு வீரர்களின் வருகை உறுதி

IPlலில் விளையாடும் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் தமது வருகையை உறுதிப்படுத்தியிருப்பதாகவும், சிலர் இந்தியாவுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 3ஆம் திகதிக்கு முதல் பஞ்சாப் அணியில் விளையாடும் இங்கிலாந்து வீரர் ரவி போபரா இந்தியாவுக்கு வந்துவிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.ஆனால் ஊடகங்கள் ஆரம்பத்தில் போபரா கலந்துகொள்ள மாட்டார் என ஊகங்கள் தெரிவிக்கப்பட்டபோதிலும் "நாங்கள் போபராவுடன் கலந்துரையாடினோம் அவர் வருவேன் எனத் தெரிவித்தார் " என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி அனில் சிரிவஸ்தவா தெரிவித்தார்.

ரவி போபரா மற்றும் பிரட் லீ ஆகியோர் நாளை வருகிறார்கள் என்று லலித் மோடி ருவிட்டரில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இது பற்றி போபரா கருத்துத் தெரிவிக்கையில் "கிறிக்கற் பலவழி எனது வாழ்க்கை அதற்காக உயிரைவிடுவது நல்லதல்ல என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர போல் கொலிங்வுட், கெவின் பீட்டர்சனுடன் சேர்த்து 8 இங்கிலாந்து வீரர்கள் IPLலில் விளையாடுவது குறிப்பிடத்தக்து.

அவுஸ்திரேலிய வீரர்களும் அவுஸ்திரேலிய அரசின் வெளிநாட்டு அலுவல்கள்  இலாகாவின் சாதகமான பதிலுக்குப்பிறகு தமது வருகையை உறுதி செய்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசின் வெளிநாட்டு அலுவல்கள் இலாகா "அல்-கொய்தா சம்பந்தமான தீவிரவாத அச்சறுத்தல் நம்பத்தகுந்தது அல்ல" என்று குறிப்பிட்டிருந்தது.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவர் சேன் வோர்ன் தனது வருகையை உறுதிப்படுத்தினார். இன்னும் சில தினங்களில் ஜெய்பூருக்கு வந்துவிடுவதாக ருவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் மற்ற அவுஸ்திரேலிய வீரர்களுடன் (டேமியன் மார்டின் உட்பட) இந்தியா வரவிருப்பதாகவும்.

ஜெய்பூர் அணியின் பிரதான நிறைவேற்று அதிகாரி சீன் மொரிஸ் தமது அணியின் அனைத்து வெளிநாட்டு வீரர்களும் விளையாடுவார்கள் எனவும் சிமித் கைவிரல் உபாதைக்கு சிகிற்சை பெற்று வருவதாகவும் அவர் கட்டாயம் IPLலில் கலந்துகொள்வார் எனவும் தெரிவித்தார்.

மத்தியு ஹெய்டன் மார்ச் 6ஆம் திகதி இந்தியா வருவார் எனவும், பிரட்லீ இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் தொடருக்குப்பிறகு பீட்டர்சன் இந்தியா வரவார் என லலித் மோடி தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய வீரர்களை அதன் தலைவர் ரிக்கிப்பொன்டிங் IPLலுக்கு வரவிடாமல் செய்வதாக லலித் மோடி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments: