தரவரிசைப் போட்டி...

எதிர்வரும் தென்னாபிரிக்காவுடனான தொடரில் இந்திய அணி தனது முதலிடத்தைப் பறிகொடுக்குமாயின் ஏப்ரல் முதலாம் திகதியன்று சர்வதேச கிறிக்கற் சபையினால் வழங்கப்படும் 175,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை இழக்க வேண்டி ஏற்படும்.
ஆனால் முதலிடத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கு 2 ரெஸ்ற் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தொடர் சமநிலை என்ற முடிவே அவர்களுக்குப் போதுமானது. அதாவது தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றாமல் விட்டால் போதும்.
2 போட்டிகளும் சமநிலையிலோ அல்லது 1-1 என்றோ முடிந்தால் இந்தியா தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும்.


மறுபுறத்தில் தொடரை 1-0 என தென்னாபிரிக்க வென்று கொள்ளுமாயின் முதலிடம் தென்னாபிரிக்கா வசமாகும்.

இன்னொரு புறத்தில் 3ம் இடத்தில் உள்ள அவுஸ்ரேலியா நியூசிலாந்துக்குச் சுற்றுலா செல்கின்ன போதிலும் அந்தத் தொடர் மூலம் தரவரிசையில் அவுஸ்ரேலியா முன்னேற முடியாததால் தென்னாபிரிக்கா அல்லது இந்தியாவிற்கே அந்த 175,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பணம் செல்லப் போகிறது.

துடுப்பாட்டத் தரவரிசையில் தற்போது கவுதம் ஹம்பீர் முதலிடத்திலும் கிரேம் ஸ்மித் 2ம் இடத்திலும் இருக்கிறார்கள். இருவருக்குமிடையில் 39 புள்ளிகள் இடைவெளி இருந்தபோதிலும் இந்தத் தோடரில் ஹம்பீர் மோசமாக ஆடினால் முதலிடம் ஸ்மித் வசம் செல்ல இடமுண்டு.




மொத்தத்தில் தரவரிசைகளைத் தீர்மானிக்கும் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி ஆரம்பிக்கிறது.

1 comments:

balavasakan said...

இது சிம்பிள் அவங்களுக்கு டெல்லி றோட்டுப்போல தட்டையான ஒரு பிட்சை போட்டால் முடிஞ்சுது விசயம் நல்ல சனமும் வரும் நீங்க சொன்ன அந்த பணமும் வரும்