இலங்கையில் உள்ளூர் போட்டிகளில் தேசிய அணிவீரர்கள்...

இலங்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாகாணமட்ட 50  பந்துப்பரிமாற்றப் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி ஆரம்பமாகின்றன.
போட்டித்தொடரில் பங்குபெறும் 6 அணிகளில் 5 மாகாணமட்ட அணிகளும் ஒரு அழைப்பு இலங்கைக் கிறிக்கற் பதினொருவர் அணியிம் அடங்குகின்றன.
மொத்தம் 76 வீரர்கள், அனைத்துத் தேசிய அணிவீரர்கள் உட்பட, பங்குபெறுகிறார்கள்.
இந்தத் தொடரின் பின்னர் மாகாணங்களுக்கிடையிலான இருபதுக்குப் இருபது தொடரும், மாகாண லீக் போட்டிகளும் நடைபெறுகின்றன.

50 பந்துப் பரிமாற்றப் போட்டிகள் 6ம் திகதி முதல் 21ம் திகதி வரையும், இருபதுக்கு இருபது போட்டிகள் பெப்ரவரி 24 முதல் மார்ச் 7 வரையும், லீக் போட்டிகள் மார்ச் 18 முதல் மே 9 வரையும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

கரிபீயன் தீவுகளில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச கிறிக்கற் சபையின் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான சிறந்த முன்னாயத்தாமாக இவ் இருபதுக்கு இருபது தொடர் அமையும்.
அத்தோடு எதிர்வரும் மார்ச் 12ம் திகதி முதல் இந்தியன் பிறீமியர் லீக் (IPL) தொடர் ஆரம்பிப்பதால்அதற்கும் இந்தத் தொடர் முன்னாயத்தாமாக அமையும்.

உள்ளூர் போட்டிகள் தொடர்பாக கடந்த 3ம் திகதி (நேற்று) செய்தியாளர்களிடம் உரையாற்றும் இலங்கைத் தேசிய அணியின் தலைவர் குமார் சங்கக்கார

வரலாற்றில் இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்திய சிறந்த வீரர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களிலிருந்து இப்படியான தொடர்கள் மூலமே தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்று ஸ்ரீலங்கா கிறிக்கற்றின் செயலாளர் திரு நிசாந்த ரணதுங்க தெரிவித்தார்.
சமட்ட கிறிக்கற் (எல்லோருக்கும் கிறிக்கற்) திட்டத்தின் கீழ் கிறிக்கற்றை கொழும்பில் மட்டுமன்றி கொழும்பிற்கு வெளியேயும் அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் ஸ்ரீலங்கா கிறிக்கற் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

இத்தொடருக்கு இலங்கையின் தேசிய வங்கியான இலங்கை வங்கி அனுசரனை வழங்குகிறது.

குறித்த படத்திற்கான முழுக் காப்புரிமையும் கிறிக்கின்போ ஸ்தாபனத்துக்குரியது.

0 comments: