ஒலிம்பிக்கை நெருங்குகிறது கிறிக்கற்...

சர்வதேச ஒலிம்பிக் சபையின் தலைவர் ஜக்ஸ் றொக் சர்வதேச கிறிக்கற் சபையை அங்கீகரித்தார், இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் மிக முக்கிய காலடியை கிறிக்கற் எடுத்து வைத்திருக்கிறது. கிறிக்கற்றோடு சேர்த்து இன்னும் 2 விளையாட்டுக்களும் அனுமதி பெற்றிருக்கின்றன.

ஜக்ஸ் றொக்

'அவர்கள் (ஐ.சி.சி) எங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாக மாறியிருக்கிறார்கள், இதன்மூலம் அவர்கள் இனிவரும் காலங்களில் எங்கள் நிகழ்வுகளில் பங்குபெறலாம்.' எனத் தெரிவித்தார் என சர்வதேச ஒலிம்பிக் சபையின் தொடர்பாடல் இயக்குனர் மார்க் அடம்ஸ் தெரிவித்தார், அத்தோடு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறுவதன் முதற்படியாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

பழைய காலப் போட்டியொன்று- Bodyline தொடர்....

அங்கீகரிக்கப்பட்ட போட்டிகள் என்ற அந்தஸ்து ஒலிம்பிக் சபையால் 2007ம் ஆண்டு கிறிக்கற்றுக்கு வழங்கப்பட்டது, ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் போட்டியாக அப்போது இடம்பெறவில்லை.

எனினும் முன்னாள் அவஸ்ரேலிய விக்கற் காப்பாளர் அடம் கில்கிறிஸ்ற் போன்றவர்களின் அழைப்புக்களான 'இருபதுக்கு இருபது போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும்' என்பதற்கு நடுவிலும் சர்வதேச கிறிக்கற் சபை இருபதுக்கு இருபதை ஒலிம்பிக்கில் சேர்ப்பதில் உடனடித் திட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

1900 ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிறிக்கற் இடம்பெற்றதும் அதன்பின்னார இடம்பெறாததும் இவ்வருடம் சீனாவில் இடம்பெறவுள்ள ஆசியப் போட்டிகளில் (Asian games) கிறிக்கற் இடம்பெறப் போவதும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

தர்ஷன் said...

கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பெறுவதெல்லாம் சரி முக்கியமான நாடுகளின் பிரதான வீரர்கள் அடங்கிய அணிகள் களமிறங்குமா?

தமிழ் கிறிக்கற் said...

@ தர்ஷன்,

ஒலிம்பிக் என்பது பெரிய, மதிப்பு மிக்க போட்டி என்பதால் அதில் பதக்கம் என்பது பெறுமதி வாய்ந்தது என்பதால் எல்லா அணிகளும் தங்கள் சிறந்த அணிகளை அனுப்புவார்கள் என்று நம்பலாம்...