லீ ஓய்வு பெறலாம்...

தனது ரெஸ்ற் மற்றும் ஒருநாள் அணித்தலைவர் றிக்கி பொன்ரிங் உடன் தொடர்புகொண்டு கலந்துரையாடிவிட்டு தனது 12 வருட சர்வதேசக் கிறிக்கற் வாழ்வைத் தொடர்ந்து தொடர்வதா அல்லது ஓய்வுபெறுவதைத் தீர்மானிக்கப் போவதாக பிரட் லீ தெரிவித்துள்ளார்.


அவரது ரெஸ்ற் எதிர்காலம் ஏற்கனவே அவுஸ்ரேலிய அணியின் பயிற்சியாளர் ரிம் நெல்சனின் கருத்தால் இல்லாமற் போயுள்ள நிலையில் பிரட் லீ மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் தனது கவனத்தைத் திருப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தபோதிலும் கடந்த த சண்டே ரெலிகிராப் இற்குக் கருத்துத் தெரிவித்த லீ தனது முழங்கைச் சத்திரசிகிச்சையால் தான் இனி ஒருபோதும் பந்துவீசாமல் போவதற்குரிய எல்லா வாய்ப்புகளும் உள்ளன எனத் தெரிவித்தார்.

'எனது கிறிக்கற்றில் எதுவும் நடக்க வாய்ப்புக்கள் உள்ளன. நான் சொல்வதன் அர்த்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சிலவேளைகளில் நான் மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்றப் போட்டிகளில் விளையாடலாம்.

310 ரெஸ்ற் விக்கற்றுக்களையும், 324 ஒருநாள்ப் போட்டி விக்கற்றுக்களையும் கைப்பற்றியிருக்கும் லீ 'நான் சிலவேளைகளில் இனி ஒரு பந்தும் வீசாமல் போகலாம். அப்படி ஒரு நிலை என்றாலும் இதுவரை நான் செய்தவற்றை நினைத்து திருப்தியடைகிறேன்.' என்றார்...

13 வருட கிறிக்கற் வாழ்வில் லீ மொத்தமாக 12 காயங்களை சந்தித்திருக்கிறார்.  எனினும் 'என் வாழ்வில் நான் சந்தித்த பெரிய சத்திரசிகிச்சை இதுதான், இது மிகக் கொடிய வலியுடையது' என்று தெரிவித்தார் லீ.

1 comments:

Aaqil Muzammil said...

லீ ஒய்வு பெற்று போக கூடாது அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்