வேகக்கணிப்புக்களை நம்பாதீர்- ஜெப் லோ(வ்)சன்...

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜெப் லோ(வ்)சன் அண்மையில் ஷோண் ரெய்ற் மணிக்கு 160.7 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பந்தை 'அது பார்க்க அந்தளவுக்கு வேகமாக இல்லை. பந்து பிரட் ஹடினின் முழங்காலளவிற்குத்தான் சென்றடைந்து... போகப் போக பந்து நிலத்தை நோக்கி தாழ்ந்து கொண்டு சென்றது.' என் த சண்டே ஹெரோல்ட் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

ஜெப் லோ(வ்)சன்.

'அவர் வீசிய ஏனைய சில பந்துகள் ஹடினை நோக்கி எம்பிக் கொண்டிருந்தன. ஹடின் கிட்டத்தட்ட 30 யார் எல்லையில் நின்று விக்கற் காப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவை அப்படிச் சென்றன. அவை மிக வேகமானவை. வேகக் கணிப்பான்களை நம்பமுடியாது. அவை இடத்திற்கிடம் மாறுபடுகின்றன. பிரட் லீ வீசிய மணிக்கு 160 கிலோமீற்றர் வேகப்பந்தும் உண்மையில் அந்தளவுக்கு வேகமானதா தெரியவில்லை' என்றார்.

எனினும்,
அன்றைய போட்டியில் ஷோண் ரெய்ற் மிகச்சிறப்பாக பந்துவீசியதாகவும், வெற்றிக்கு அவரது பந்துவீச்சு அடிப்படையாக அமைந்ததாகவும் ஜெப் லொவ்சன் தெரிவித்தார்.



பாகிஸ்தான் அணிக்கு முன்பு பயிற்சியளித்தவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: