தங்களை நிரூபித்துக் கொண்ட பாகிஸ்தானும் அவுஸ்ரேலியாவும்....

பாகிஸ்தான் மற்றுத் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் இல் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கிறது...
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணியின் புதிய இருபதுக்கு இருபது அணித்தலைவர் மைக்கல் கிளார்க் இதுவரை கண்டிராத அளவுக்கு வேகமான மெல்பேர்ண் மைதானத்தில் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தார்.


ஆரம்பமே அவுஸ்ரேலியாவிற்கு ஆப்பாக அமைந்தது.
முதல் விக்கற்றாக ஷேண் வொற்சன் 8 பந்துகளில் 8 ஓட்டங்களைப் பெற்றிருக்கையில், அணி 14 ஓட்டங்களைப் பெற்றிருக்கையில், டேவிட் வோணர் அடித்த பந்திற்கு 3 ஓட்டங்கள் ஓட முனைந்து அக்மல் சகோதரர்களால் ரண் அவுட்டாக்கப்பட்டார்.
டேவிட் வோணர் வழமையான அதிரடியை தொடர்ந்த போதிலும் 14 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றிருக்கையில் மொகமட் ஆசிப் இன் பந்துவீச்சில் இம்ரான் நசீரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணி 6.5 பந்துப் பரிமாற்றங்களில் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தொடர்ந்து விக்கற்றுக்கள் சரிந்துகொண்டிருக்க மறுபுறத்தில் டேவிட் ஹசி  ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.



பாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சு,
ஆசிப் - 4--0--31--1
நவீட்  - 4--0--27--1
மலிக்  - 4--0--31--2
குல்   -3.4--0--20--3
அஜ்மல்- 3--0--18--0


பதிலுக்குத் துடுப்பெடத் தொடங்கிய பாகிஸ்தான் அணி ஷோண் ரெய்ற் இன் வேகத்தில் மிரண்டது.
ஷோண் ரெய்ற் இப்போட்டியில் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசியமை குறிப்பிடத்தக்கது.



முதல் 2 விக்கற்றுக்களும் 10 ஓட்டங்களுக்குள் இழக்கப்பட்டபோதிலும் மறுபுறத்தில் கம்ரன் அக்மல் விளாசிக் கொண்டிருந்தார். பின்னர் 3 ஆவது விக்கற் 44 இல் வீழ்த்தப்பட 4 ஆவது விக்கற் 59 இல் வீழ்த்தப்பட போட்டி அவுஸ்ரேலிய அணிக்கு சார்பாக மாறியது. எனினும் இரு அக்மல் சகோதரர்களும் இணைந்து சிறப்பாக ஆடி 98 வரை அணியை கொண்டுவந்தபோது வெறும் 33 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பெற்றிருந்த கம்ரன் அக்மல் ரெய்ற் இன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 6 ஆவது விக்கற் 103 இலும், 7 ஆவது 107 இலும் 8 ஆவது 118 இலும் வீழ்த்தப்பட்டது.



கடைசிப் பந்துப் பரிமாற்றத்தில் 2 விக்கற்றுக்கள் கைவசமிருக்க 10 ஓட்டங்கள் தேவைப்பட அந்தப் பந்துப் பரிமாற்றத்தை வொற்சன் வீசினார். அந்தப் பந்துபரிமாற்றத்தில் பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்யக்கூடியவரான உமர் அக்மல் 25 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதற்பந்திலேயே ஆட்டமிழக்க போட்டி திசைமாறியது.
கடைசியில் அவுஸ்ரேலியா 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.


அவுஸ்ரேலியா சார்பாக 
ஷோண் ரெய்ற் 4 பந்துப் பரிமாற்றங்களில் வெறும் 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கற்றுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக அவுஸ்ரேலியாவின் ஷோண் ரெய்ற் தெரிவானார்.

இதன்மூலம் அவுஸ்ரேலியர்கள் தாங்கள் வெல்வதற்கு விளையாடுபவர்கள் என்பதையும் பாகிஸ்தானியர்கள் தாங்கள் வெல்ல இன்னும் உற்சாகம், உத்வேகம் வேண்டும் என்பதையும் நிரூபித்துக் கொண்டார்கள்.

முழுமையான ஸ்கோர் விபரம் - http://www.cricinfo.com/ausvpak09/engine/current/match/406207.html
 
இதேவேளை பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் நியூசிலாந்து 146 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து முதல் 2 விக்கற்றுக்களை 19 ஓட்டங்களுக்கு இழந்தபோதிலும் பின்னர் சுதாகரித்து 9 விக்கற்றுக்களை இழந்து 336 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
நியூசிலாந்து சார்பாக ஜேகம் ஒராம் 40 பந்துகளில் 83 ஓட்டங்களைக் குவித்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 190 ஓட்டங்களுக்கு சகல விக்கற்றுக்களையும் இழந்தது.

முழு ஸ்கோர் விகரம் - http://www.cricinfo.com/nzvbdesh2010/engine/current/match/423783.html

0 comments: