பிரட்லீ டெஸ்டிலிருந்து ஓய்வு



பிரட்லீ இன்று டெஸ்ட் கிறிக்கட்டிலிருந்து தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 33 வயதான அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ கடந்தவாரம் தான் டெஸ்ட் கிறிக்கற் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

இது பற்றி பிரட்லீ கூறும்போது "76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 310 விக்கட்டுகள் வீழ்த்தியிருக்கிறேன், ஆனால் காயங்களாலும், உபாதைகளாலும் அவை பறிக்கப்படும் போது வேதனையாக உள்ளது" என்றார். பிரட்லீ காயம் காரணமாக ஆஷஸ் போட்டியில் விளையாட முடியாமல் போனதும் அதிலிருந்து அதற்குப்பிறகு நடந்த பொக்சிங் தின கிறிக்கற் போட்டிவரை பிரட்லீ எந்த ஒரு டெஸ்டிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கருத்துத்தெரிவித்த பிரட்லீ எனது கிறிக்கற் வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம் நான் சிலவேளை ஒருநாள் போட்டிகளில் விளையாடலாம், அல்லது விளையாடாமலே போகலாம், எனது கிறிக்கற் வாழ்க்கை எனக்கு திருப்தியளிக்கிறது, ஆனால் இது எனது கிறிக்கற் வாழ்க்கை முடிந்து விட்டது என்றும் கூறமுடியாது.
நான் கிறிக்கற்றில் இன்னும் என்ன செய்ய வேண்டும் உண்மையாகவே எனக்குத்தெரியாது, எனக்குத் தெரிந்தவற்றை நான் களத்தில் செய்யத்தயாராக இருக்கிறேன். என்றார்.

அன்ரு பிளின்டோஃப், ஜேக்கப் ஓரம் ஆகியோரின் வரிசையில் இப்போது பிரட்லீயும் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பிரட்லீயும் இவர்களைப் போல ஒருநாள் மற்றும் ருவென்ரி ருவென்ரி போட்டிகளில் விளையாடுவார்என எதிர்பார்க்கலாம்.

2 comments:

சசிகுமார் said...

போய் தொலையட்டும் விடுங்கள் அப்ப தான் நம்ம ஆளுங்க தொடர்ந்து முதலிடத்தில் இருப்பாங்க ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Bavan said...

ஆனால் ஜாம்பவான் கிறிக்கட் வீரர்களில் கிறிக்கற் வாழ்க்கை முடிவுகள் இப்படி செல்வது கவலைக்குரிய விடயம், கங்குலி, சனத், இப்போது பிரட்லீ.. ஹிம்ம்..:(((