முதலிடப் போட்டி ஆரம்பமாகிறது...

தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட ரெஸ்ற் தொடர் இன்று ஆரம்பிக்கிறது...
முதலிடத்தில் இருக்கும் இந்தியாவும், 2ம் இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்காவும் முதலிடத்தை தக்கவைப்பதிலும் கைப்பற்றுவதிலும் குறியாக இறங்குகின்றன. எனினும் இரு அணிகளும் தாங்கள் தரப்படுத்தலை விட தொடர்ச்சியாக சரியான கிறிக்கற் விளையாடுதலை மனதில் கொண்டே தொடரிற்குள் செல்வதாக குறிப்பிடுகின்றனர்.
(தரப்படுத்தலில் தொடரின் முக்கியத்துவத்தை அறிய இங்கே செல்க. )

நீண்ட கால அவுஸ்ரேலிய ஆதிக்கத்தை விட்டு இப்போது வேறு இரு அணிகள் ஆதிக்கம் செலுத்த முற்படுவதோடு மாபெரும் பரிசுத்தொகையை அடைய முந்திக் கொள்கின்றன.

இந்திய அணியில் றாகுல் ட்ராவிட் மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோர் நிச்சயமாக இல்லாத நிலையில் வி.வி.எஸ்.லக்ஸ்மன் விளையாடுவாரா இல்லை என்ற சந்தேகம் தொடர்ந்து நிலவுகின்றது.


இந்திய அணியில் கவுதம் ஹம்பீர், விரேந்தர் செவாக் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகவும்,
முரளி விஜய் 3 ம் இலக்க வீரராகவும்,
தொடர்ந்து சச்சின், வி.வி.எஸ்.லக்ஸ்மன் (விளையாடாவிடின் ரோகித் சர்மா), சுப்ரமணியம் பத்ரிநாத், மகேந்திரசிங் டோணி, ஹர்பஜன் சிங், ஷகீர் கான் ஆகியோரும், அடுத்ததாக பிரங்ஜான் ஒசா அல்லது அமித் மிர்சாவும் தொடர்ந்து இசாந் சர்மாவும் விளையாடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது....


தென்னாபிரிக்கா சார்பில் கிரேம் ஸ்மித், அஸ்வெல் பிரின்ஸ், ஹசீம் அம்லா, ஜக்ஸ் கலிஸ், ஏ.பி.டி.வில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, மார்க் பவுச்சர் ஆகியோரும் சுழற்பந்துவீச்சாளராக ஜெகன் போத்தா அல்லது போல் ஹரிஸும், தொடர்ந்து வெய்ன் பானேல், டேல் ஸ்ரெய்ன் ஐத் தொடர்ந்து மோர்னி மோக்கலும் விளையாடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி இடம்பெறப் போகும் நாக்பூர் மைதானம் வழமையான இந்திய ஆடுகளங்கள் போல தட்டையானதாக இருந்தாலும் மேகமூட்ட வானிலை இருப்பது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். புதிய பந்துடன் ஸ்விங் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. மேகமூட்ட வானிலை தொடர்ந்து நீடிக்கின் றிவேர்ஸ் ஸ்விங்கை பெரிதும் நம்பியிருக்கும் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு பாதிப்பாக அமையலாம்.

இந்தியா சார்பில் சுப்ரமணியம் பத்ரிநாத் தனது ரெஸ்ற் அறிமுகத்தை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படிச் செய்யின் 2003 ம் ஆண்டு யுவ்ராஜ் சிங் அறிமுகத்ததை மேற்கொண்டபின்னர் இந்திய அணியில் மத்தியவரிசை மூலம் ரெஸ்ற் அறிமுகத்தைப் பெறும் முதல் வீரராக பத்ரினாத் அமைவார்.

இதே வேளை மோர்ணி மோர்க்கல், டேல் ஸ்ரெய்ன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் அனுபவமற்ற இந்தித் துடுப்பாட்ட வீரர்களை சற்று திகிலடையச் செய்திருக்கலாம், வேறான்றும் இல்லை பவுன்ஸர் பந்துகளை வீசுவோம் என்ற மாதிரியாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

'எங்களது பந்துவீச்சாளர்கள் மணிக்கு 140 கிலோமீற்ருக்கு மேல் தொடர்ந்து பந்துவீசும் திறமையைக் கொண்டவர்கள். அத்தோடு பவுன்ஸர் பந்துகளை நாங்கள் பயன்படுத்தி துடுப்பாட்டவீரர்களுக்கு நெருக்கடி கொடுக்காவிடின் நாங்கள் முட்டாள்களாக மாறிவிடுவோம்' என மோர்கல் சொன்னார்.
இதேவேளை ஸ்ரெய்ன் 'நான் இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறேன். மணிக்கு 145, 150 கிலோமீற்றர் வேகத்தில் யோக்கர் பந்துகளை சென்னையிலோ, நாக்பூரிலோ, ஜொகன்னர்ஸ்பேர்க்கிலோ அல்து பேர்த் இலோ வீசினாலும் எந்த வித்தியாசங்களும் இல்லை' எனத் தெரிவித்தார்.

போட்டி காலை 9.30 இற்கு ஆரம்பிக்கிறது...
(பிந்திய செய்தி இந்தியா சார்பில் வ்ரித்மான் சாகா தனது ரெஸ்ற் அறிமுகத்தை மேற்கொள்கிறார்.)

0 comments: