இங்கிலாந்து பந்துவீச்சுப் பயிற்சியாளராக கிலஸ்பி?

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேஸன் கிலெஸ்பி இங்கிலாந்து கிறிக்கற் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாராக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேஸன் கிலஸ்பி பயிற்சியாளராக மூன்றாம் நிலைச் சான்றிதழை (Level III coaching certificate) பூர்த்தி செய்கிறார்.


மைக்கல் கஸ்பிரோவிச்

இங்கிலாந்து அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த முன்னாள் மேற்கிந்திய சகலதுறை வீரர் ஒற்றிஸ் கிப்ஸனின் (Ottis Gibson) இராஜினாமாவிற்குப் பிறகு கிலஸ்பியோடு அவரது முன்னாள் சக வீரர் மைக்கல் கஸ்ப்ரோவிச் உம் இந்தப் பந்துவீச்சாளர் பதவியில் விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கிந்திய அணியின் பயிற்சியாளராக கிப்ஸன் நியமிக்கப்பட்டமையால் இந்த இராஜினாமா செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிப்ஸன்

அடுத்த ஆஷஷ் தொடருக்காக அவுஸ்ரேலிய ஆடுகளங்களைப் பற்றிய பரந்த அறிவு கிலஸ்பி இற்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் தவிர முன்னாள் தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் அலன் டொனால்ட் இன் பெயரும் சக நாட்டவரான ஷோண் பொலக்கின் பெயரும் இந்தப் பதவிக்கு அடிபடுகிறது.
2007ம் ஆண்டு இதே பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவி இடைக்கால பயிற்சியாளர் வடிவில் கிடைத்தபோது வேறு பொறுப்புகள் காரணமாக அப்பதவியை அலன் டொனால்ட் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர உள்நாட்டவர்களான (இங்கிலாந்து) அங்குஸ் பிரேஸர் மற்றும் டெரன் ஹோவ் உம் மற்றும் அவுஸ்ரேலியரான முன்னாள் பாகிஸ்தான் பயிற்சியாளரான ஜெப் லோஷனின் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இற்குப் பயணமாக 2 வாரங்களுக்கு உள்ளதாகவே கிப்ஸன் தனது இராஜினாமாவை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments: