கொல்கத்தா ஆடுகளம் மீது டோனி அதிருப்தி...

இந்திய அணியைப் பொறுத்தவரை அவர்களின் துடுப்பாட்ட வரிசையையும் அவர்களின் எதிரணியையும் விட கொல்கத்தை ஈடன் காடன்ஸ் ஆடுகளம் தான் இந்திய அணிக்கு பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது போலிருக்கிறது.



கொல்கத்தாவின் மைதான/ஆடுகளப் பராமரிப்பாளர் பிரபீர் முகர்ஜி நல்ல ஆடுகளத்தை தயாரிப்பதை விரும்புவதாகவும், சுழலுக்கு சாதகமான மைதானத்தை வடிவமைக்குமாறு இந்திய அணியிலிருந்து வந்த கோரிக்கையை அவர் ஏற்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆடுகளத்தில் காணப்படும் புற்களை முழுமையாக வெட்டும் திட்டத்திற்கு பிரபீர் முகர்ஜி ஒத்துழைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்திய அணியின் தலைவர் சிறிது கோபமடைந்திருக்கிறார் அல்லது அதிருப்தியடைந்திருக்கிறார்.
'பொதுவாக sporting wickets ஐத் தயாரிக்க வேண்டும் என்ற கருத்து சொல்லப்படுகிறது, என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ரீதியில்ஆடுகளங்களில் புற்கள் இருக்க வேண்டும் என்று எங்கும் எழுதிவைக்கப்படவில்லை' இவ்வாறு தனது அதிருப்தியை வெளியிட்ட அவர், 'போட்டியை நடாத்தும் அணி தங்களுக்கு சாதகமான ரீதியில் ஆடுகளத்தை தயாரிப்பது வழமையானது,எதிரணிக்கு சார்பாக அல்ல' என்றும் தெரிவித்தார்.



'போட்டித்தனமை வாய்ந்த ஆடுகளங்கள் என்றால் ஆடுகளத்தில் புற்களும், வேகப்ந்து வீச்சாளர்களுக்கு அதிக பவுண்ஸ்களும் இருக்க வேண்டும் என்று தவறாகக் கொள்ளப்படுகிறது. போட்டித்தன்மை வாய்ந்த ஆடுகளமென்றால் துடுப்புக்கும், பந்துக்கும் இடையில் சமநிலை நிலவினால் போதுமானது.. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சிறப்புத்தன்மைகள் உண்டு. தென்னாபிரிக்கா சென்றால் அங்கு பவுண்ஸ் ம், seam movemeant உம் இருக்கும், இங்கிலாந்து நியூசிலாந்தில் ஸ்விங் அதிகமாக இருக்கும். அதேபோல் எங்களுக்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து திரும்புதலும் பவுண்ஸ் செய்தலும் அதிகமாக உண்டு.' என்றார்.




மைதானத்தை சக வீரர்கள் சிலருடனும், பயிற்றுவிப்பாளருடனும் சென்று பார்வையிட்ட டோணி ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் போலிருக்கிறது என்று கருத்துத் தெரிவித்தார்...

3 comments:

Bavan said...

//தங்களுக்கு சாதகமான ரீதியில் ஆடுகளத்தை தயாரிப்பது வழமையானது//

அப்ப தட்டையான ஆடுகளங்களைத் தயாரித்துத்தான் இவ்வளவுநாளும் வின் பண்ணுறாங்களோ?

ஒரு போட்டில மோசமாக தோற்றதுக்கே இப்படியா? எ.கொ.இ

வாழ்க இந்தியா..;)

Unknown said...

கிரிக்கெட் வர்ணனைகள் பற்றி சில விமர்சனங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். கிரிக்கெட் ஒரு கனவான்களின் விளையாட்டு என்று சொல்லிக்கொண்டாலும் கிரிக்கெட்டின் பிறப்பிடம் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் அப்படியாக நடந்து கொள்கின்றனவா என்பது விமர்சனத்துக்குரியதே.
கிரிக்கெட்போட்டிஒன்றினைநாடாத்தும் நாடு அந்த போட்டியின் வர்ணனையாளர்களின் பட்டியலில்
இரண்டு நாட்டினதும் வர்னனையாளர்களை ஈடுபடுத்துவது வழமை.ஆனால் கிரிக்கெட் விளையாட்டில்
முன்னணி வகிக்கும் ஒரு நாட்டில் நடக்கும் போட்டிகளில் அந்த நாட்டின் ஜாம்பவான்களே ஒலிவாங்கியுடன்
காட்சி தருவார்கள். இதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியகாரனங்கள் கற்பிக்கப்படலாம். ஆனால் அவர்களின் வர்ணனை
மிகவும் அருவருப்பானதாக இருக்கும். தங்களின் நாட்டின் வீரர்களின் நடவடிக்கைகளே முன்னிலைப்படுத்தப்படும் .
தாங்கள் சார்ந்த அணியின் வேண்டத்தகாத நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்படாமல் விடப்படும். இவர்களில் சிலர் ஏனைய நாடுகளுக்கு சென்று வர்ணனை செய்வதில்லை. அப்படியாக வேறு நாடுகளுக்கு சென்று வர்ணனை செய்யும் ஆற்றல் படைத்தவர்கள்
அங்கு சென்று தங்களை விட்ட நடு நிலைமை யாளர் இல்லை என்பது போல நடந்து கொள்வார்கள். இந்த நிலைமை ஏன் விமர்சிக்கப்படக் கூடாது?

கன்கொன் || Kangon said...

@Suwaminathan

நீங்கள் நேரடியாகவே உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்...

கிறிக்கற் பற்றிக் கலந்துரையாடலில் ஈடுபட விரும்பின் இவர்களது பேஸ்புக் பக்கத்தில் சேர்ந்து அங்குள்ளவர்களோடு கதையுங்கள்...அனைவரும் நண்பர்களே...