பந்தைச் சேதப்படுத்துவது பாகிஸ்தானில் வழமையானது-ரமீஸ் ராஜா...

ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஷகிட் அப்ரிடியின் திகைப்பிற்கிடமான பந்து கடிக்கும் சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது என்று சொல்லும் போதிலும் பந்தைச் சேதப்படுத்துதல் பாகிஸதானின் வழமையான, சாதாரணமான செயற்பாடு என்கிறார்.


பந்தைச் சேதப்படுத்தல் வழமையானது எனச் சொல்லப்படும் ஒரு யுகத்திலேயே அப்ரிடி வருகிறார். இது பாகிஸ்தானின் தட்டையான ஆடுகளங்களில் செய்யப்பட்ட ஒன்று, அத்தோடு இது பாவமல்ல, ஒரு கலை என்றார். பாகிஸ்தானின் சாதாரண நடவடிக்கை இது என தெரிவிக்கும் ரமீஸ் ராஜா,
ஒவ்வொரு அணியும் ஏதாவதொன்றைச் செய்கின்றன. அவுஸ்ரேலியர்கள் வாய்ச் சண்டையைக் (sledging) கொண்டுவந்தார்கள், ஆனால் அது மற்றைய அணிகளால் பயன்படுத்தப்படுவதாக இருக்கலாம் என்றார், ஆனால் அவுஸ்ரேலியர்கள் அதை பிழையான வார்த்தைப் பிரயோகங்களைச் செய்து அதை எங்கள் விக்கற்றுக்களை எடுக்கும் ஒரு திட்டம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால் அதுவும் விதிமுறைகளுக்கு முரணானது.

தொடர்ந்து அதிகரித்துவரும் துடுப்பாட்ட வீரர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்குமான சமநிலைக் குழம்பலின் மத்தியில் பந்துவீச்சாளர்கள் துடுப்பாட்ட வீரர்களோடு எஜமான்-வேலைக்காரன் மாதிரியான நிலைமை ஏற்பட்டுவிட்டது என்றும் ராஜா தெரிவித்தார் என்று தெரிவித்ததாக டெய்லி ரைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

தட்டையான ஆடுகளங்கள், தடித்த துடுப்புகள், குறுகிய எல்லைக்கோடுகள், பவுண்சர்கள் மடடுப்படுத்தப்பட்டமை, free hit கள், பவர் பிளே கள் போன்றன பந்துவீச்சாளர்களுக்கான எதிரான உள்ளவற்றின் சில உதாரணங்கள் என பாகிஸ்தானின் முன்னாள் மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரரான ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

இருந்தபோதிலும் அப்ரிடி நாட்டிற்கு கெட்ட பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறார் என்று தெரிவித்த ரமீஸ், அப்ரிடிக்கு சிறிது ஓய்வு வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஒரு 6 ஓட்டம் சிறிய நேர மகிழ்ச்சியைத் தந்தாலும் விக்கற் இழக்கப்படின் அதுவே பெரிது என்பதை முகாமையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஆகவே அப்ரிடிக்கு ஓய்வு கொடுங்கள். அப்ரிடி இதை வழமையானதிற்கு எதிராக செய்திருக்கால், ஆனால் இதை அவர் தனது முன்னாள் வீரர்களின் வழமையான நடவடிக்கைகளைப் பார்த்தே தொடர்ந்தார் என்றும் ராஜா தெரிவித்தார்.

மூலச்செய்தி: http://www.dailytimes.com.pk/default.asp?page=2010\02\05\story_5-2-2010_pg2_6 இலிருந்து தழுவி எழுதப்பட்டது.

1 comments:

கன்கொன் || Kangon said...

பல பாகிஸ்தான் ஜாம்பவான்களின் சாதனைகள் மீது கேள்வி எழுப்பப்படப் போகிறது....
வாழ்க பாகிஸ்தான் கிறிக்கற், வளர்க அவர்களது சர்ச்சைகள்....