அவுஸ்ரேலியாவிற்காக லீ விளையாடலாம்...

அவுஸ்ரேலியப் பயிற்சியாளர் ரிம் நெல்சனின் கருத்துப்படி அவுஸ்ரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ (Brett Lee) அவுஸ்ரேலியா சார்பாக சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்புண்டு எனினும் அது ரெஸ்ற் போட்டிகளாக அமைய வாய்ப்புக்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முழங்கைக் காயத்திலிருந்து லீ தற்போது குணமடைந்து வருகிறார், அத்தோடு எதிர்காலத்தில் அவரால் பந்துவீச முடியுமா என்பதும் தெளிவில்லாமல் இருக்கிறது.

தனது சர்வதேச கிறிக்கற் எதிர்காலத்தைப் பற்றி தீர்மானிக்கவில்லை, சிலவேளை அவர் இந்தியன் பிறீமியர் லீக் விளையாடுவதோடு தன்னை மடடுப்படுத்திக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளன.
(இவ்வாறு உண்மையான செய்தி சொன்னாலும் இந்தியன் பிறீமியர் லீக் சர்வதேசப் போட்டி இல்லை)

ஒருநாள் போட்டி அணியில் லீ பங்குபெற வாய்ப்புக்கள் உள்ளன என்று தெரிவித்த நில்சன், ரெஸ்ற் போட்டிகளில் பங்குபெற வாய்ப்புக்கள் இல்லை என்றவாறாக கருத்துத் தெரிவித்திருந்தார்.



'தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பிரட் (லீ) விளையாட விரும்பினால் அவுஸ்ரேலிய ஒருநாள்ப் போட்டி அணியில் பிரட் செய்ய பாரிய பணி உள்ளது.' என நில்சன் AFP நிறுவனத்திற்குக் கருத்துத் தெரிவித்தார்.

ரெஸ்ற் போட்டிகள் அவருக்கு சவாலானவை, அவர் 12 அல்லது 14 மாதங்களாக ரெஸ்ற் போட்டிகள் விளையாடவில்லை, வயது கூடிவிட்ட நிலையில் இவ்வளவு நிறையக் காலத்திற்கு ரெஸ்ற் போட்டிகள் விளையாடாமை அவருக்கு கடினமாக அமையலாம்.
எனினும் அவரிடம் தரம் இருக்கின்றது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
கடந்த ஆண்டு சம்பியன்ஸ் தொடரில் அவரது பந்துவீச்சு அருமையானதாக அமைந்ததோடு எங்கள் வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணமாக அமைந்தது.

அவர் தயார் மற்றும் ஆவலுடன் உள்ளார் என்றால் அவர் தொடர்ந்து விளையாட நிறையக் காலம் எடுக்காது என்றார் நில்சன்.



74 ரெஸ்ற் போட்டிகளில் மொத்தம் 310 விக்கற்றுக்களையும், 186 ஒருநாள் போட்டிகளில் 324 விக்கற்றுகளையும் கைப்பற்றியுள்ளார்.

0 comments: