உள்வீட்டு இரகசியங்களை வெளியிட வக்கார் யுனிஸ் தயாராகிறார்

அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தானின் படுதோல்வியின் உள்வீட்டு இரகசியங்களை வெளியிட வக்கார் யுனிஸ் தயாராகிறார்.

மொகமட் ஆமிருக்கு பயிற்சியளிக்கும் வக்கார் யுனிஸ்

பாகிஸ்தான் அணியின் அவுஸ்ரேலிய சுற்றுலாவில் பாகிஸ்தானால் காட்டப்பட்ட மோசமான வெளிப்பாடுகள் காரணமாக மனவருத்தத்திற்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வேகப்பந்துவீச்சாளரும், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளருமான வக்கார் யுனிஸ் அணியின் தோல்விக்கு 'மறைமுகக் காரணிகள்' இருப்பதாகக் கூறினார்.

அணியின் பயிற்சியாளர் சேவையில் தொடர்ந்து பயிற்சியளிப்பதில் விருப்பமில்லை எனவும் மிக விரைவில் அணியின் தோல்விக்கான மறைமுகக் காரணிகளை பகிரங்கப்படுத்துவார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் காரணங்களை நான் தேசிய விளையாட்டு செயற்குழுவிற்கு முன்னாலே சொல்லுவேன் என்றும் தன்னை தேசிய விளையாட்டு ஆணைக்குழு அழைக்க வேண்டும் எனவும் அப்போதே தான் மக்களுக்கு அக்காரணிகளைச் சொல்லலாம் என்றும் வக்கார் யுனிஸ் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் மோசமான வெளிப்பாடுகள் பற்றி தான் செயற்குழுவில் கலந்துரையாட விரும்புவதாகவும், அப்போது தான் அனைவரும் பாகிஸ்தான் கிறிக்கற்றிற்கு என்ன நடக்கிறது என்பதை அறியலாம் எனவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிறிக்கற்றில் நேர்விதமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் செயற்குழு கடமையுணர்வுடன் செயற்படவேண்டும் என தான் நினைப்பதாக வக்கார் த டோண் (The Dawn) இற்குத் தெரிவித்தார்.

அவுஸ்ரேலியாவுடனான தொடரில் பாகிஸ்தான் ரெஸ்ற் தொடரை 3-0 என இழந்ததோடு ஒருநாள் தொடரை 5-0 என இழந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தொடரில் பாகிஸ்தானின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த வக்கார் யுனிஸ் அந்த மோசமான வெளிப்பாடுகளுக்கு 'விளையாட்டோடு சம்பந்தப்படாத காரணிகள்' இருப்பதாக தெரிவிக்கிறார்.

நன்றி: DNA India

1 comments:

வரதராஜலு .பூ said...

//அவுஸ்ரேலியாவுடனான தொடரில் பாகிஸ்தான் ரெஸ்ற் தொடரை 3-0 என இழந்ததோடு ஒருநாள் தொடரை 5-0 என இழந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தொடரில் பாகிஸ்தானின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த வக்கார் யுனிஸ் அந்த மோசமான வெளிப்பாடுகளுக்கு 'விளையாட்டோடு சம்பந்தப்படாத காரணிகள்' இருப்பதாக தெரிவிக்கிறார்.//

எதிர்பார்த்ததுதான்.