அணித்தலைமையிலிருந்து விலகும் எண்ணமில்லை - யூசுப்

அண்மைக்கால பாகிஸ்தானின் தோல்விகளின் நடுவிலும் பாகிஸ்தான் கிறிக்கற் அணியின் தலைவராக தொடர்ந்து நீடிக்க தான் விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ரெஸ்ற் மற்றும் ஒருநாள்ப் போட்டி அணித்தலைவர் மொகமட் யூசுப் தெரிவித்துள்ளார்....



பாகிஸ்தான் கிறிக்கற் சபையின் தலைவர் அவுஸ்ரேலியத் தொடரின் முடிவில் அணித்தலைமை மாற்றமொன்றைப் பற்றிக் கதைத்திருந்தார். பாகிஸ்தான் கிறிக்கற் இன் பிரதான தெரிவாளரான இக்பால் ஹாசிம் அவுஸ்ரேலிய சுற்றுலாவின் முடிவில் தனத பதவியை ராஜினாமா செய்திருந்த போதிலும் அதைப் பின்பற்றி பதவியிலிருந்து விலக மொகமட் யூசுப் விரும்பவில்லை.


'பிரதம தெரிவாளர் பதவியிலிருந்து விலகியிருந்தால் அது அவரின் (தனிப்பட்ட) எண்ணம் என்று அவுஸ்ரேலியாவிலிருந்து நாட்டிற்கு திரும்புகையில் யூசுப் தெரிவித்தார்.
'அணித்தலைவராக நான் அந்தளவுக்கு மோசமாகச் செயற்படவல்லை. அதாவது பதவி விலகும் அளவிற்கு மோசமாக செய்யவில்லை. யாரும் ஏற்றுக் கொள்ள முன்வராத காலகட்டத்தில் அணித்தலைமைப் பதவியை நாட்டிற்காக ஏற்றுக் கொண்டேன், தொடர்ந்து நாட்டிற்காக தொடருவேன்' என்று தெரிவித்தார்.


நியூசிலாந்துடனான ரெஸ்ற் தொடரை1-1 என சமன் செய்த பின்னர் அணியிலிருந்து தற்காலிக ஓய்வையும் அணித்தலைமையிலிருந்து விலகலையும் யூனிஸ்கான் மேற்கொண்ட ராஜினாமைவைத் தொடர்ந்து அணித்லைவராக யூசுப் பதவி ஏற்றார்.

'நியூசிலாந்திற்கு நாங்கள் சென்ற சூழலில் தொடரை சமன் செய்தது சிறப்பானது. எங்கள் வீரர்கள் அனுபவமற்றவர்களாக இருந்த போதிலும் நாங்கள் அவுஸ்ரேலியாவில் சிறப்பாகச் செயற்பட்டோம் என்று நம்புகிறேன்' என்று யூசுப் தெரிவித்தார்.

3 comments:

balavasakan said...

நான்தான் பெஸ்ட் கொமன்ட் கோபியின் புதியதளத்திறகு நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ஆனால் கஸ்டமான வேலை சில நாடகளில் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் இத்தனையும் எப்படி எழுதித்தள்ளுவது...

Subankan said...

புதிய தளத்திற்கு வாழ்த்துகள் கோபி, அடித்து ஆடுங்கள்

கன்கொன் || Kangon said...

நன்றி பாலவாசகன் அண்ணா மற்றும் சுபா அண்ணா...

@பாலா அண்ணா,
சும்மா பொழுதுபோக்காகத் தான்...