அணி ஒற்றுமையை ஒரு வீரர் தான் சீர்குலைக்கிறார் - யூசுப்


பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவர் மொஹமட் யூசுப் பாகிஸ்தான் அணியின் ஒற்றுமையை சீர்குலைக்க அணியில் உள்ள ஒரு வீரர் முனைவதாக தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்குப்பேட்டியளிக்கும்போதே அவர் இது பற்றி பல விடயங்களைத் தெரிவித்தார். ஆனால் அந்த வீரரின் பெயரைக்கூற மறுத்துவிட்டார் யூசுப்.

"அணியின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஒரு வீரர் ஈடுபட்டுள்ளார் அதில் எந்தவித ஐயமுமில்லை. நான் எங்கள் பயிற்றுனர் இன்டிக்காப் அலாம் மற்றும் கிறிக்கற் சபையுடன் இதுபற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். அவர்களும் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டனர். நான் அந்த வீரரின் பெயரை பாகிஸ்தான் கிறிக்கற் சபைதலைவரிடம் மட்டும் தெரிவித்தேன் என்றும், இன்டிக்காப் அலாம்(பயிற்றுனர்),அப்துர் ரகீப் (முகாமையாளர்) மற்றும் அப்ரிடிக்கு அந்த வீரர் யாரெனத்தெரியும் என்று தெரிவித்தார். நாம் அது பற்றி பலதடவைகள் பேசியிருக்கிறோம்' என்றும் தெரிவித்தார்.

நியூசிலாந்து தொடரின்போதே இன்டிகாப் அலாம் அவரிடம் கவனமாக இருக்கும்படி எனக்கு அறிவுறுத்தினார், ஆனால் நான் அவரின் நடத்தையை நேரில் காணும்வரை பொறுமைகாத்தேன், நான் அவரின் நடத்தையை அவுஸ்திரேலிய தொடரில் அவதானித்த பிறகு அவரை டெஸ்ட் போட்டிகளிலிருந்து நீக்கினோம். அவுஸ்திரேலியாவில் நாம் அவர் தொடர்பாக நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்று தீர்மானித்தோம்." என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை 3-0 எனவும் ஒருநாள்தொடரை 5-0 எனவும் அவுஸ்திரேலியாவில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

அணியின் தோல்வியில் கிறிக்கற் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையும் காரணம் எனத்தெரிவித்த யூசுப், நியூசிலாந்து தொடரில் அணிவீரர்கள் அனைவரும் என்னுடன் ஒன்றிணைந்து செயற்பட்டனர். ஆனால் எனக்கு பாகிஸ்தான் கிறிக்கற் சபை எப்போது அணித்தலைமை மாற்றம் பற்றி அறிவித்தது என்று தெரியாது. ஆனால் நான் அடுத்த போட்டியில் அணித்தலைவர் இல்லை என அறிந்த அணியின் ஆறு, ஏழு வீரர்கள் தாங்கள் அணித்தலைவர்போல காட்டிக்கொள்ளத்தொடங்கினர்.என்றார், மேலும் கருத்து வெளியிட்ட யூசுப் எனக்கு தலைமைத்துத் தகுதி இயற்கையிலே இல்லை ஆனால் என்னால் முடிநடத அளவு முயற்சி செய்தேன், ஆனால் என்னை றிக்கி பொன்ரிங்குடன் ஒப்பிடுவது மடமையானது அவர் மிகுந்த அனுபவமுள்ள ஒரு அணித்தலைவர் என்றார்.

அனைத்து அணிகளையும் எடுத்துப்பாருங்கள் அதிகமாக சாதிப்பவர்கள் அணித்தலைவர்களாக இருக்கிறார்கள்.அதுபோலவே பாகிஸ்தானின் இளம்வீரர் ஒருவர் சிறப்பாக செயற்படுகிறார் என்றால் அவரை அணித்தலைவராக்கலாம். அந்தவகையில் நான் அதைச் செய்திருக்கிறேன் என்றார். அதுவும் அணித்தலைமை பொறுப்பை ஏற்க யாரும் தயாரில்லாத நிலையில் நான் அதைச்செய்திருக்கிறேன் என்றார்.

செய்தி - http://www.cricinfo.com/

4 comments:

கன்கொன் || Kangon said...

அது சொய்ப் மலிக் ஆக இருக்கவே வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன...
ஏனெனில் சொய்ப் மலிக் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடவில்லை...

அல்லது மிஸ்பா உல் ஹக்... மிஸ்பா உல் ஹக் கடைசிப் போட்டியில் விளையாடவில்லை...

ஆனால் மலிக் ஆக இருக்கவே வாய்ப்புக்கள் உண்டு...

Bavan said...

@கன்கொன்- மலிக்காக இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம் ஏனெனில் அவர்தான் மூத்த வீரர் முன்னாள் அணித்தலைவர், மிஸ்பா மலிக்கை விட அணியில் அனுபவத்திலும் இளையவர் மிஸ்பா..:)

எல்லாம் உள்ளுக்க குத்துவெட்டா இருக்கும்...

இப்பிடியே போனால் பாகிஸ்தானின் இடத்தை பங்களாதேஸ் பிடிச்சிடும்..;)

கன்கொன் || Kangon said...

@பவன்,

மலிக்காக இருக்கத்தான் வாய்ப்புக்கள் உண்டு...
ஆனால் மிஸ்பாவும் குழப்படி காரர் என்று கேள்விப்பட்டேன்...

ஆனால் மிஸ்பாவுக்கு வயது கூட... 35 இற்குக் கிட்ட....

சொல்ல முடியாது...

ஆனால் நானும் மலிக் தான் என்று நினைக்கிறேன்.

Bavan said...

@ கன்கொன்,

பார்க்கலாம் எப்படியெண்டாலும் விடயம் வெளிய வரும்தானே..பொறுத்திருந்து பாப்பம்..;)